Sunday, September 25, 2005

ஜித்தன் (காதலியே)

Image hosting by Photobucket
பாடல் : காதலியே
படம் : ஜித்தன்
பாடகர் : கரிஷ் ராகவேந்திரா
இசை : சிறிகாந் தேவா


காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ?
கண்ணும் கண்ணும் மோதுவதாலே காயமாகுமோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகையில்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு.. கண்ணை காணவில்லையே..

கடற்கறை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம்
இந்த பாதம் எங்கை வைத்தேன் வந்து சொல்வாய் என்னிடம்..

ஒரு வீனையை கையில் கொடுத்து ஏன் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்?
ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ ஏன் திரை விட்டு மறைந்தாய்?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

தூங்கும் போது கண்கள் இரண்டும் பார்வை கெட கூடுமோ?
தண்ணிர் மீது போகும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ?
இறந்து போன காதல் கவிதை இரவில் கூட்டம் போடுதோ?
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிரி குதித்து ஓடுதோ?
ஒரு சுகந்திரக் கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதலின் விடு முறை நாளோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

அந்நியன் ( காதல் யானை )

Image hosting by Photobucket
படம் : அந்நியன்
பாடகர் : நாகுல், மெல்வின், G.V.பிரகாஷ்
பாடல் : காதல் யானை வருகிற ரெமோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர் : ஷங்கர்
தயாரிப்பாளர் : ரவிச்சந்திரன்
வரிகள் : மோகன்டோஷ்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹீ தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ
நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ காதல்

யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

Thursday, September 15, 2005

சந்திரமுகி ( வாராய் ..வாராய் )

Image hosting by Photobucket
படம் : சந்திரமுகி
பாடல் : வாராய் ..வாராய் வாராய்........
பாடியவர்: நிந்தியாஷ்ரி & திப்பூ
வரிகள் : வாலி
இசை: வித்யாசாகர்

பெண் : வாராய் ..வாராய் வாராய்........
வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும் கை தொட
தோகையும் தோலின் மேல் ஆட ........

வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும்
தோகையும் தோலின் மேல் ஆட ........

தோம் தோம் தோம் ..தோம் தோம் தோம்
.......அஆ அஆஆ .............அஆஆ அஆ ......
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ...
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ... ஆஆஆஆஅ

நாள் முற்றும் நீ துஞ்ஜ தமிழ் நங்கை இடைத்தேடும்
ஆஆஆ .......வாராதோ சுப யோகம் தான்
கண்ணா நீ மெதுவாக அணைத்தாலே அணையாதோ
வனமாலின் நணல் மோகம் தான்

ஆண் :தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்

பெண் : வடியும் ஈர பூவின் தேன் துளி
பருகும் போது ராஜ லீலை தான்
தழுவும் மாது மெல்ல என் மடி தேடுதொ
தலதலதல என இந்த பருவமும்
உனை என்னி தினம் ஒரு தினம்
ஒரு சபலத்தில் துடிப்பது தேராய் தேவனே
வாராய் ..வாராய் வாராய்........

ஆண் : லகலகலகலகலக.....

பெண்: என் பந்தமோ இது நின் பந்தமோ
ஏழு ஜென்ம பந்தத்தின் தொடராகுமோ

ஆண்: என் புஷ்பமோ இது தேன் புஷ்பமோ
எண்ணங்கள் கலந்தாடும் புது புஷ்பமோ

பெண்:விரதமும் விலகனும் வா வா
என் தலைவனும் தழுவனும் நீ வா

ஆண்: பருவத்தின் மனசு ஒன்று அழைக்க
பெண் வனத்தொரு மயிலோடு தொடவா

பெண்: இனி இரவினில் ததும்பிய மனதுனை கலந்திட

ஆண்: சரசமும் பிறந்திட விரகமும் தலைந்திட

பெண்: இளமையின் இனிமைகள் தொட தொட புதுப்பிட

பெண் & ஆண்: இடைவெளி மறைந்திங்கு மருமுரை பழகிட நீ தான் நான் தான்

பெண்: சேர

ஆண்: லகலகலகலகலக.........

தாம் தரிகிட தேம் தரிகிட தொம் தரிகிட
நம் தரிகிட .......
தத தரிகிட திதி தரிகிட தொம் தொம் தரிகிட
நம் நம் தரிகிட ....
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் தா ..
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் ....
தகிட்ட திகிட்ட தொம் கிட்ட நம் கிட்ட
தகதகிட
தத் தலாஙு தொம்
தத் தலாஙு தொம்
தத கித்தலாஙு தொம் ...
.......... தலாஙு நகக்கஜும்
அஅதடேந்த நகக்க ஜும்...

Wednesday, September 14, 2005

தேவதையை கண்டேன்

Image hosting by Photobucket

படம் : தேவதையை கண்டேன்
நடிகர்/ நடிகை: தனுஷ், ஸ்ரீதேவி
பாடல் : அழகே பிரம்மனிடம்
பாடல் : (வாலி குழு)

பெண்:: ................ நனனன.... நானனன..... நானனன......


ஆ : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

ஆ: என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ: உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே. மறவேன் என்றும் உன்னையே

பெண்: நான் பாலைவனத்தின் விதை போல் ... நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆ: உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை

பெண் : உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆ: இத்தனையும் இனி கிடைக்குமா?

பெண்: கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ: என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன் உயிரை உன்னை பார்த்ததும்.. உலகே புதிதானதே

பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்.. என்னை சுமந்த அன்னை தெய்வம்.. இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..

ஆ: பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண் : உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆ: சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?

பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று......... ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..

ஆ: என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் : ... நடக்கும்... நடக்கும் நான் கூட சொல்கிறேன்

Sunday, September 11, 2005

7/G ரெயின்போ காலனி (கண் பேசும்)

Image hosted by Photobucket.com

படம்: 7/G ரெயின்போ காலனி

பாடகர்: கார்திக்

லீரிக் : ந. முத்துகுமார்

இசை: யுவன் சங்கர்ராஜா

பாடல்:கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை

கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை - ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்களெல்லாம் ஆட புடவை கட்டி பெண்ணானது புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களில் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

யே கண் பேசும் வார்த்தை ....... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை

Ah Aah (மயிலிறகே...)

Image hosting by Photobucket
படம் : Ah Aah
இயக்கம் : S. J சூர்யா
இசை : எ. ஆர். ரகுமான்.
பாடகர் : மதுஸ்ரீ நரேஷ் அய்யர்
பாடல் : மயிலிறகே..

ஆண் : மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

பெண் : உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....
மயிலிறகாய் ....மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
(இசை)

பெண் : மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை பிரித்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மன சிறையில்...

பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

ஆண் : வான் உள்ளவரை வாழும் பாடல்

பெண் : மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....
(இசை..)


பெண் : தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்... அமிர்தாய்...அமிர்தாய்...
கவி ஆர்த்திட நீ வருவாய்........

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?

பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு

ஆண் : ஊர் உறங்கட்டும்
உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

பெண் : உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....

பெண் : மயிலிறகாய் ....மயிலிறகாய்
வருடுகிறாய்.. மெல்ல

ஆண் : வருடுகிறாய்.... மெல்ல

பெண் : வருடுகிறாய் மெல்ல......

ஆண் : வருடுகிறாய்.... மெல்ல

பெண் : வருடுகிறாய் மெல்ல......